atlee-good-news-post-viral update
கோலிவுட் திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
தற்போது இவர் பாலிவுட் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே நடித்து வருகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு நடிகர் அட்லீ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதில் அவர், தனது மனைவி பிரியா அட்லீ கர்ப்பமாக இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று புகைப்படத்துடன் வெளியிட்டு உங்கள் அனைவரின் ஆசிகளும் அன்பும் வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார். இப்பதிவை கண்டு மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இப்பதிவினை வைரலாக்கி வருகின்றனர்.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…