Athulya Ravi warns fans
சமூகவலைதளங்களில் போலிக்கணக்கு உருவாக்குவது என்பது மிகச் சாதாரணம் ஆகிவிட்டது. கையில் இன்டர்நெட் இருந்தாலே போதும். பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்கு துவங்கி அந்தக் கணக்குகளைத் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர்.
இது தொடர்பாக அந்த பிரபலத்தின் பெயருக்குத் தான் கலங்கம் ஏற்படுகிறது. இதனாலேயே பிரபலங்கள் தங்கள் பெயரில் போலிக்கணக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே ரசிகர்களை எச்சரித்து விடுகின்றனர்.
தற்போது நடிகை அதுல்யாவும் இந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதுகுறித்து தெரிய வந்த அதுல்யா, உடனே அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார்.
“பேஸ்புக்கில் யாரோ ஒரு போலி ஐடியை உருவாக்கி, திரைப்படத் துறையில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புவது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் மோசமானது. ஏற்கனவே அது குறித்து புகாரளித்துள்ளேன். நான் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தயவு செய்து இந்த ஐடி-யை ரிப்போர்ட் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…