மீண்டும் பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாகை சூடவா, களவாணி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணத்துடன் நடிகர் அதர்வா இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘சண்டிவீரன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதர்வா – சற்குணம் இணையும் புதிய படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாக உள்ளதாகவும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

6 hours ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

6 hours ago

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…

6 hours ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

6 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…

6 hours ago

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…

6 hours ago