Arya introduced the original Vaathiyare
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதியும், கபிலனாக நடித்துள்ள ஆர்யாவும் சைக்கிளில் போகும் காட்சியை அடிப்படையாக கொண்டு போடப்படும் மீம்ஸ் தான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளன.
நடிகர் பசுபதி பெயரில் ஏராளமான போலி டுவிட்டர் பக்கங்கள் செயல்பட்டு வந்தன, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் பசுபதியின் உண்மையான டுவிட்டர் பக்கத்தை நடிகர் ஆர்யா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “வாத்தியாரே இதான் டுவிட்டர் வாத்தியாரே. பாக்ஸிங்க விட இரத்த பூமி. உன்னோட பேருல இங்க நிறைய பேர் இருக்காங்கனு தெரிஞ்சதும், ஒரிஜினல் நான்தாண்டானு உள்ள வந்த பாத்தியா, உன் மனசே மனசு தான். வா வாத்தியாரே இந்த உலகத்துக்குள்ள போலாம்” என குறிப்பிட்டு, பசுபதியின் உண்மையான டுவிட்டர் பக்கத்தையும் அதில் பகிர்ந்திருந்தார்.
இதற்கு பதிலளித்து பசுபதி கூறுகையில், “ஆமாம் கபிலா, பாக்ஸிங்கே உலகம்னு இருந்துட்டேன், பரம்பரைக்கு ஒன்னுனா மொத ஆளா வந்துருவேன், நான் உன் சைக்கிள்ளயே பின்னாடி உட்காந்துக்கிறேன், என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிகினு போ” என குறிப்பிட்டுள்ளார்.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc