தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அருண் விஜய்

நடிகர் விஜயகுமாரின் மகனான அருண்குமார், 1995-ல் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், முன்னணி நாயகனாக உயர முடியாமல் போராடி வந்தார். இதையடுத்து அவர் தனது பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார்.

அதன்பிறகு அவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அமையத் தொடங்கின. குறிப்பாக, கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின், அவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்தது. தொடர்ந்து அவர் நடித்த ‘தடம்’, ‘குற்றம் 23’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘மாஃபியா’ ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.

தற்போது அக்னிச்சிறகுகள், பார்டர், வா டீல், பாக்ஸர், சினம், யானை, ஓ மை டாக் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள அருண்விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல இயக்குனர் சுசீந்திரன் உடன் அவர் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சுசீந்திரன், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா என பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக அழகர்சாமியின் குதிரை படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

4 hours ago

இட்லி கடை: அருண் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி…

5 hours ago

முத்துவிடம் சிக்கிய சிந்தாமணி, முத்துவின் கேள்வி என்ன? வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி பற்றி…

5 hours ago

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி.!!

ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறியுள்ளார் ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத்…

10 hours ago

இட்லி கடை : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

10 hours ago

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

2 days ago