arrested-for-defrauding-actor-bondamani-of-rs-1-lakh
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவரான போண்டாமணி, சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். போண்டாமணி ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார்.
குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது. . போண்டாமணி இதனிடையே நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டது. அவருக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நடிகர் பார்த்திபன், வடிவேலு, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி கடந்த 27-ம் தேதி வீடு திரும்பினார். மருத்துவமனையில் போண்டாமணியை சந்தித்த அமைச்சர் இதனிடையில் மருத்துவமனையில் உதவி செய்வதுபோல் நடித்து ராஜேஷ் என்கிற பிரித்தீவ் என்பவர் போண்டாமணியுடன் பழக்கத்தில் இருந்துள்ளார்.
அவருக்கு உதவியாக கடைகளுக்கு செல்வது போன்ற உதவிகளை செய்து வந்துள்ளார். இதனை நம்பி அவருடைய மனைவி மாதவி மருந்து வாங்கி வர அவருடைய ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார்.போண்டாமணி மருந்து வாங்கி வருவதாக சென்ற ராஜேஷ் ஏடிஎம் கார்டிலிருந்து நகைக்கடையிலிருந்து ரூ.1 லட்சத்திற்கு நகை வாங்கியதாக மாதவியின் செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து தான் ஏமாந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போண்டாமணியின் மனைவி மாதவி இதுகுறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் ராஜேஷை தேடி வந்தனர். போண்டாமணி இந்நிலையில் ராஜேஷ் விழுப்புரம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கைது செய்த ராஜேஷிடமிருந்து பணம் எதுவும் மீட்டதாக தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள போண்டாமணியிடம் கருணை இல்லாமல் அவரை ஏமாற்றியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…