Are there any controversial scene about Tamils in the web series 'The Family Man 2' - Directors Description
சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது. இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இத்தொடரை இயக்கி உள்ளனர். இதில் நடிகை சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாகவும், மனித வெடிகுண்டாகவும் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இந்த நிலையில் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில் சமந்தா போராளி சீருடையில் குண்டுகளை வெடிக்கும் காட்சிகள் உள்ளன. டிரெய்லரில் இலங்கை தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரித்து இருப்பதாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ள இந்த தொடரை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பிலும் வற்புறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சர்ச்சைக்கு விளக்கம் அளித்து ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளின் அடிப்படையில் யூகமான கருத்துகள் எழுந்துள்ளன. இந்த தொடரின் முன்னணி நடிகர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் தமிழர்கள். தமிழ் மக்களையும் தமிழ் கலாசாரத்தையும் நன்கு அறிவோம்.
தமிழ் மக்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ளது. இந்த தொடருக்காக பல வருடங்கள் உழைத்துள்ளோம். அனைவரும் தொடர் வெளியாவதுவரை பொறுத்திருந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடரை பார்த்த பிறகு நீங்கள் பாராட்டுவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளனர்.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…