AR Murugadoss released mass information on ‘Thalapathy 65’
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்ததாக தனது 65-வது படத்தில் ஏ.ஆர். முருகதாசுடன் இணைய உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படம் குறித்து சமூக வலைதள பேட்டியில் பேசியுள்ளார். அதில், “நீங்க மீண்டும் விஜய் சாருடன் படம் பண்றது உண்மையா?, அது துப்பாக்கி 2ம் பாகமா?” என்ற கேள்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளித்ததாவது: “எந்தப் படத்தின் தொடர்ச்சியாகவும் இல்லாமல், ஓப்பனாக இருந்தால் நல்லா இருக்கும் என்பது என்னோட கருத்து. ஒரு படத்தின் தொடர்ச்சி என்பது மீண்டும் ஒரு வட்டத்துக்குள் போட்டு அடைப்பது போல் தான் இருக்கும். அதைத் தாண்டி ஒன்றை யோசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமாக இருக்கும்.
சமூக வலைதளங்களில், துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் எனக்கு தலைப்பு கொடுக்கவில்லை என்று வருவது எல்லாம் பொய். அதில் எதுவும் உண்மையில்லை. இதனால் படத்தில் சிக்கல் என்பதெல்லாம் இல்லை. அது எந்த மாதிரியான படம் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து முறையான அறிவிப்பு வந்தால் தான் சரியாக இருக்கும்” என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…