Anjali in Allu Arjun movie
மலையாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் ‘நயாட்டு’. அரசியல் திரில்லர் படமான இதில் குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தை தற்போது பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய உள்ளனர்.
அதன்படி இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் அல்லு அர்ஜுன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தில் நடிகை அஞ்சலி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சத்யதேவ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்க கவுதம் மேனன் மற்றும் சுதீர் வர்மாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…