தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத், முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் அனிருத்தின் இசை பெரிது பேசப்பட்டது. இவர் தற்போது விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் கலக்கி கொண்டிருந்த அனிருத், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். இப்படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விரைவில் ரூ.1000 கோடியே எட்டி விடும் என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர் மத்தியில் உள்ளது.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல் பில்போர்ட் தளத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது, உலகின் பிரபலமான பில்போர்ட் தளத்தின் குளோபல் 200 பிரிவில் ‘ஜவான்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘சலேயே’ (chaleya) பாடல் 97-வது இடத்தை பிடித்துள்ளது. இதனை அனிருத் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
Modha Rathri Title Song Video | Rishikanth | Anishma AnilKumar | Raja Karuppasamy | Bharath…
Mudhala Mudiva Video Song | Modha Rathri | Rishikanth | Anishma AnilK | Bharat Sankar…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…