andrea jeremiah Tweet
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்குறார். தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
தற்போது இவர் சமூக வலைத்தளம் மூலமாக தனது ரசிகர்களுக்கு உடல்நலன் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ரத்த தானம் அளிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு சில வேண்டுகோளையும் விடுத்துள்ளார். அதில் “இன்று ஒரு நல்ல செயலைச் செய்ய வேண்டுமா? அப்போ இரத்த தானம் செய்யுங்கள்! இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்ததால், நேற்று இரத்த வங்கிக்குச் சென்று ரத்த தானம் செய்தேன் என்று நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor