Latest Tamil cinema News
ஆன்மீகம்

அனாதை குழந்தைகளை வளர்ப்பது ஜோதிடப்படி சரியா? தெரிந்து கொள்வோமா!

🔸 பொதுவாக அனாதைக் குழந்தையை அல்லது குழந்தைகளை தத்து எடுத்து விட்டதால் தான் ஒரு குடும்பம் அபகீர்த்தி அடைந்து விட்டது அல்லது கெட்டுவிட்டது என்று சொல்வது முறையல்ல.

🔸 அப்படி ஏதேனும் சங்கடங்கள் நேர்ந்தாலும்அது குழந்தையை தத்தெடுத்த பெற்றோரின் ஜாதக அமைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

🔸 யாருக்கெல்லாம் வாய்ப்பில்லை:

ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி 6,8, 12 எட்டு பாப பலம் பெற்று வக்கிரம் அடைந்து ஐந்தில் ராகு இருப்பின் தத்து எடுத்தாலும் கூட அந்தப் பிள்ளை தங்குவது கடினம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அப்படிப்பட்ட நபர்களுக்கு பிள்ளை அவர்கள் வீட்டில் வளரும் பாக்கியமே இல்லை. மேற்கண்டபடி இருப்பின் அதற்கு பரிகாரமும் இல்லை.

🔸 பிள்ளைகளின் பலன்:

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளுக்கு என்று ஒருவித ஜாதக அமைப்பு உண்டு. அதனுடன் முன் ஜென்ம வினை பயன் சேரும் போது அப்பிள்ளை அனாதை இல்லங்களை அடைகிறது.

🔸 அதுபோல பிள்ளைகளை தத்தெடுத்து வளர்க்கும் படியான தத்புத்திர யோகம் சில ஜாதகங்களில் காணப்படும்.

இந்நிலையில் கிரகசாரம் மற்றும் விதிப் பயனால்தான் அவர்கள் ஒரு குழந்தையை தத்து எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எந்த குழந்தையாக இருந்தாலும் நல்ல நேரம் பார்த்து தத்து எடுப்பது நல்லது.

Related posts

தூங்கும்போது சிலரை எழுப்பக்கூடாது ஏன்?

user

எலுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி காவு கொடுப்பது ஏன்?

user

மகம் நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெற இவற்றை செய்யுங்கள்

user