Alangu movie first look poster update
தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகி இருக்கும் திரைப்படம்தான் அலங்கு. கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் , தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர். இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் , சரத் அப்பானி, அவர்களுடன் காளிவெங்கட் உடன் குணாநிதி கதை நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது .
இந்த திரைப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார் , இவர் உறுமீன் , பயணிகள் கவனிக்கவும் என்ற இரு திரைப்படங்களை இயக்கியவர். மேலும் சமீபத்தில் வெற்றிபெற்ற குட்நைட் திரைப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த செல்ஃபி திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கதுஅலங்கு – என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். அத்துடன் ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் , ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஆனால் கால போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் , நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி இருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க வனம் , வனம் சார்ந்த மக்கள் என படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு , கேரள மாநிலம் இடுக்கி ,அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம் , கோவை மாவட்டம் ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர் படக்குழு .
முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் வன விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து இப்படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு தெரிவித்தது .
CAST & CREW
நடிகர்கள்:
குணாநிதி, செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, சௌந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர்.
படக் குழுவினர் ;
எழுத்து & இயக்கம் : SP. சக்திவேல்
ஒளிப்பதிவு : S.பாண்டிகுமார்
இசை : அஜீஷ்
கலை இயக்குனர் : P.A. ஆனந்த்
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
சண்டை பயிற்சி : தினேஷ் காசி
ஒலி வடிவம் : S.அழகியகூத்தன், சுரேன்.G
ஒலி கலவை : சுரேன்.G
நடனம் : அசார், தாஸ்தா
கூடுதல் கலை இயக்குனர் : தினேஷ் மோகன்
ஒப்பனை : ஷேக் பாஷா
விலங்கு பயிற்சி : செந்து மோகன்
ஆடை : T.பாண்டியன்
ஆடை வடிவமைப்பு : ஜோஸ்வா மாக்ஸ்வெல் J
பாடல் : மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன்
கிராபிக்ஸ் : அஜக்ஸ் மீடியா டெக்
கலரிஸ்ட் : ரங்கா
வண்ணம் : பிக்சல் லைட் ஸ்டூடியோ
தயாரிப்பு நிர்வாகி : S.முருகன்
தயாரிப்பு மேற்பார்வை : அருண் விச்சு
தயாரிப்பு மேலாளர் : RK.சேது
உதவி தயாரிப்பு மேலாளர் : சேட்டு போல்ட்
மக்கள் தொடர்பு : R.குமரேசன்
விளம்பர வடிவமைப்பு : தண்டோரா
விளம்பர ஸ்டில்ஸ் : R.மனோ, கமலேஷ் சத்தியன்
இயக்குனர் குழுவினர் : வீரா விஜயரங்கம், அருண் சிவசுப்ரமணியம், விஜய் சீனிவாசன், லியோ லோகன், அபிலாஷ் செல்வமணி, செபின் S, தேவதாஸ் ஜானகிராமன்
நிர்வாக தயாரிப்பு : D.சங்கர்பாலாஜி
தயாரிப்பாளர் : D.சபரீஷ், S.A. சங்கமித்ரா
தயாரிப்பு நிறுவனம் : DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…