ரஜினியுடன் மோத தயாராகும் அஜித்?

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் படமாக்க வேண்டிய சண்டை காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த காட்சிகளை எடுத்து விட்டு ‘டப்பிங், எடிட்டிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ்’ உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு படத்தை முடக்கி உள்ளது.

இதனால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 1-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த படக்குழு, பின்னர் அதனை கொரோனாவால் தள்ளிவைத்துவிட்டனர். ஆகஸ்டு மாதம் வலிமை படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து இருந்தனர்.

தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஆதலால் வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறார்களாம். ரஜினியின் அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வலிமை படமும் அந்த ரேஸில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

16 minutes ago

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

60 minutes ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

7 hours ago

Thangarathinamey – Video Song

https://youtu.be/apxygLROFF0?si=XIwXjw6_VBRTI9AW

7 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி.. இயக்குனர் அமீர் கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…

8 hours ago