Ajith kumar.Condolence message for Puneeth Rajkumar
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சில மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் இரங்கல் செய்தியை தெரிவித்து இருக்கிறார். அதில், புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷ்டவசமான மறைவைக் கேட்டு வருந்துகிறேன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த துயரத்தை போக்க வலிமை பெறட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…