after-11-year-3-movie-released
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் முன்னாள் மனைவியும் ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்த திரைப்படம் தான் 3. இதில் தனுஷ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா தயாரிக்க அனிருத் இசையமைத்து இப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனுஷ் எழுதி அனிருத் இசை அமைத்திருந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ஹிட்டானது. அதனால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2011 ஆம் ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் வெற்றி பெறாமல் கலவையான விமர்சனங்களை மற்றும் பெற்றிருந்தது.
இந்நிலையில் திடீரென்று இப்படத்தை 11 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆனா இப்படம் ஆந்திராவில் தெலுங்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் 3படத்தின் 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகி ஓடி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மிகுந்த உற்சாகத்தில் தனுஷ் இருக்கிறாராம். ஏனெனில் அவர் தெலுங்கில் முதன்முறையாக நடித்துள்ள “வாத்தி” திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. 11 வருடங்களுக்கு முன்பு நடித்திருந்த 3 படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வாத்தி திரைப்படத்திற்கு இதைவிட டபுள் மடங்கு வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தனுஷ் இருக்கிறாராம். இந்த சூப்பரான தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறியுள்ளார் ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத்…
இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…