Actresses interested in starring in web series
கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன.
இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த தொடரில் நடிக்க அவர் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்து இன்னொரு வெப் தொடரில் நடிக்க சமந்தாவுக்கு ரூ.8 கோடி சம்பளம் கொடுக்க பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா, சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக சம்பளம் காரணமாக நடிகைகள் பார்வை வெப் தொடர்கள் பக்கம் திரும்பி உள்ளது. ஏற்கனவே மீனா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் முன்னணி கதாநாயகிகளான திரிஷா, ஹன்சிகா, சுருதிஹாசன், அனுஷ்கா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…