actress trisha the road movie motion poster update
தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து பல ரசிகர்களின் இதயத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா தற்போது அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் “தி ரோட்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கடந்த 2000 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ஷபீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் துப்பாக்கியுடன் மிரட்டலாக போஸ் கொடுத்து இருக்கும் த்ரிஷாவின் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…