actress-tamannah latest video
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் பிஸியாக இருந்து வருகிறார்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கும் தமன்னா இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காவாலா என்னும் பாடல் மூலம் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார். இதனால் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் தமன்னா இப்பாடலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தமன்னா கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு நிகழ்ச்சியை விட்டு செல்லும்போது தமன்னாவிடம் ரசிகர் ஒருவர் பாதுகாவலர்கள் மற்றும் பவுன்சர்களை தாண்டி வந்து அவரது கையை பிடித்துவிடுகிறார். அதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பவுன்சர்களை விலக சொல்லி அந்த நபரை அழைத்து தமன்னா அவருக்கு கை கொடுத்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்திருக்கிறார். அதன் வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து தமன்னாவின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…