actress simran is happy with sai pallavi interview viral
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாளத் திரைப்படமான பிரேமம் படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிச்சயமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக கலக்கி வருகிறார்.
தற்போது தனது நடனத்தாலும், நடிப்பாலும் தெலுங்கு திரை உலகில் பிஸியாக இருந்து வரும் சாய்பல்லவி தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அப்டேட்டை படக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நடிகை சாய் பல்லவி சிம்ரன் குறித்து அளித்திருக்கும் பேட்டியின் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர், தான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, சிம்ரனின் படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்போது தான் நடிகையானால், சிம்ரனை போலத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். சாய் பல்லவியின் இந்த பேட்டியை பார்த்த சிம்ரன், நெகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…