Actress Aishwarya Rai Bachchan has appeared before the Enforcement Department
கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்’ நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின. இதில் இந்தியாவை சேர்ந்த அரசியல் சினிமா, தொழில், மற்றும் விளையாட்டு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஐநூருக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரிய வந்தது. நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினரின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
பிரிட்டனுக்கு சொந்தமான வெர்ஜியன் தீவில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் அமிதாப்பின் மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
புதுடெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக கோரி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் அவர் தமக்கு கால அவகாசம் கோரியதுடன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில் மூன்றாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரான ஐஸ்வர்யா ராயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தன் தரப்பு விளக்கத்தை ஐஸ்வர்யா ராய் அளித்தார். அந்த விபரத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…