actor vishal-video-goes-viral
“செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். விஷால் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரத்னம்’ திரைப்படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இளம் பெண்ணுடன் விஷால்இந்நிலையில், நடிகர் விஷால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு நியூயார் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒருவர் தங்களை வீடியோ எடுப்பதை பார்த்து பதறிப்போன விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு அந்த பெண் உடன் தலைதெறிக்க ஓடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பெண் விஷாலின் காதலியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் இது பட புரொமோஷன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…
‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒன்…
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த பழம்பெரும் நடிகை…
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G