Actor Vishal Announcement to Plus Two Students
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாது தேவி அறக்கட்டளை மூலமாக தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது +2 மாரவர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பிளஸ்+2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் புரட்சி தளபதி விஷால் அவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மனம் தளராமல் இருக்க வேண்டும். தோல்விகள் வாழ்க்கையில் இயல்பு தான். ஆகையால் எந்த விதத்திலும் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து படித்து, மறுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், அன்பான சொந்தங்களுக்கும் வணக்கம். வருடம்தோறும் பிளஸ்+2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு படிக்க இயலாத வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளை நமது அண்ணன் புரட்சி தளபதி விஷால் அவர்கள் தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலம் படிக்கவைத்து வருகிறார். அதேபோன்று இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களின் பதிவு நடைபெற்று வருகிறது.
நமது மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பிளஸ்+2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி, தேர்ச்சி பெற்று மேற்கொண்டு படிக்க முடியாத மாணவ, மாணவிகள் குறித்த முழு விபரங்களையும் நமது ‘தேவி அறக்கட்டளை’ மின்னஞ்சல் devifoundationchennai@gmail.com முகவரிக்கு அனுப்புங்கள். அவர்களின் மனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு, அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிகள் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும் தேவி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளருமான V ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…