கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து அனைவரையும் அசத்தியிருந்தார்.
தற்போது தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து மாபெரும் வரவேற்பை பெற்று 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கான பிரமோஷன் பணிகளும் சூடு பிடித்து வரும் நிலையில் இப்படத்தின் கதாபாத்திரங்கள் உருவான விதத்தின் வீடியோவை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அந்த வகையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரமின் தோற்றம் வடிவமைக்கப்பட்ட தற்போது வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் டிரைலர் விரைவில் வெளியாகும் என்ற தகவலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…