actor vikram thanking post viral update
தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சீயான் விக்ரம். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வரும் இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்தியிருந்த நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் -2 வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். என்னை மகிழ்வித்த உங்களுடைய அளவில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் பல கோடி நன்றிகள். வீர வேல்! வெற்றி வேல்! இப்படிக்கு ஆதித்த கரிகாலன் என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார்.
பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…