actor vijay antony after accident health condition update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாகவும் வளம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டில் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனால் இப்படத்தில் இரண்டாம் பாகத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனியே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மலேசியா மற்றும் லங்காவி தீவில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் பைக் போட்டை ஓட்டும் போது விஜய் ஆண்டனி அவர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவருக்கு முகம் மற்றும் உடம்பில் பலமான காயங்கள் ஏற்பட்டு பற்கள் உடைந்து சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார்.
அவரை படகுழுவினர் லங்காவியல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். தற்போது விஜய் ஆண்டனிக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக மலேசியாவிற்கு நாளை கொண்டு செல்ல இருப்பதாக படகுழுவினர் தெரிவித்துள்ளனர். அங்கு மருத்துவமனையில் ஒளிப்பதிவாளர் ஓம், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் ஆகியோர் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…