actor-surya-started-the-dubbing-work-of-kanguva
தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா, இயக்குகிறார்.இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் காட்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.உலகத் தரம் வாய்ந்த ‘அத்னா ஆர்ட்ஸ்’ ஸ்டுடியோவில் இதற்கான ‘டப்பிங்’ பணிகள் நடந்து வருகின்றன. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு ‘டப்பிங்’ பணியை தொடங்கினார்.
மேலும், சமூகவலைதளத்தில் ‘கங்குவா’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ”டப்பிங்’ பணியின்போது படத்தின் இறுதி தயாரிப்பைப் பார்த்த சூர்யா திருப்தி அடைந்து இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை பாராட்டினார். ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகின்றன. படம் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதேநேரம், ‘கங்குவா’ படம் இந்த ஆண்டின் (2024) முதல் பாதியில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc