actor-simbu-new-movie-update
கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது ஒபேலி என் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதன்படி, நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அவரது 49-வது திரைப்படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்னும் வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. முதல் முறையாக சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…