actor rituraj-singh-passed-away
ஹெச்.வினோத் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் துணிவு. இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் மஞ்சு வாரியர், பாவனி, அமீர் ஆகியோர் நடித்திருந்தனர். முக்கிய வில்லனாக, மலையாள நடிகர் ஜான் கொக்கன் நடித்திருந்தார். இந்த படத்தில் மக்கள் பணத்தை திருடிய பணக்கார வில்லன்களுள் ஒருவராக நடித்திருந்தவர் தான் ரித்துராஜ் சிங். இப்படத்தில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் பணக்கார வில்லன்களாக 3 பேர் நடித்திருப்பர். இதில், படத்தின் ஆரம்ப காட்சியில் கடத்தப்பட்டு, கடைசியில் உள்ளாடையுடன் உட்கார வைக்கப்படும் வில்லனும் ஒருவர். இந்த கதாப்பாத்திரத்தில் ரித்துராஜ் சிங் நடித்திருந்தார்.
பாலிவுட் நடிகரான இவர், இன்னும் சில தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். இந்நிலையில், நேற்று மிகவும் சோர்ந்து காணப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரித்துராஜ் சிங் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 59.சில நாட்களுக்கு முன்பு கணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் சமீபத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவரது நண்பர் கூறியுள்ளார். இந்தியில் பிரபலமாக இருக்கும் ‘அனுபமா’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரித்துராஜ். இவரது கதாப்பாத்திரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ள செய்தி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…