நடிகை பூர்ணாவை தொடர்பு கொண்டு துபாய் தொழிலதிபர் குடும்பத்தினர் என்று ஒரு கும்பல் பெண் கேட்டு வந்துள்ளனர். அதன்பின் அந்த கும்பல் போலியானவர்கள், மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நடிகை பூர்ணா தரப்பு புகாரின் பெயரில் போலீஸ் அந்த கும்பலை விசாரித்து கைது செய்துள்ளது.
இது குறித்து பேட்டியளித்த நடிகை பூர்ணா “இந்த சம்பவத்தால் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். எனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து தான் எந்த துபாய் தொழிலதிபர் கும்பல் என்னை பெண் கேட்டு வந்தனர். அவர்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தோம்.
என்னை மணக்க இருந்தவருடன் நானும் அவரும் திருமணத்திற்கு பின் எப்படி இருக்கவேண்டும் என கலந்து பேசினோம். இந்த நிலையில் தான் அந்த கும்பல் போலியென தெரியவந்தது, அன்பாக பேசி எங்களை ஏமாற்றி உள்ளார்கள். இதனால் திருமணம் என்றாலே பயமாக உள்ளது, யாரை நம்புவது என்றே தெரியவில்லை.
இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என முடிவு செய்துள்ளேன், இந்த அதிர்ச்சியிலிருந்து மீள தற்போது நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறேன்” என பேட்டியளித்துள்ளார்.
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…