actor-parthiban-post-on-rumors-of-death
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான ஒத்த செருப்பு மற்றும் இரவு நிழல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டையராக நடித்து அசதியிருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் இவர் 52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என்னும் தலைப்பில் தனது அடுத்த படத்தையும் இயக்க இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் திடீரென உயிரிழந்ததாக அதிர்ச்சி அளிக்கும் வதந்தியை ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் பரப்பியுள்ளனர். இது குறித்து நடிகர் பார்த்திபன் வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
அதில் அவர், நொடிகளில் மரணமடைவதும், மறுபடியும் உயிர்த்தெழுவதும் இயற்கை தான். ஆனால் நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் தான் புரியவில்லை. நெகட்டிவிட்டிகளை பரப்ப இது போல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம், மக்களுக்கும் பரப்புவோம் என்று அப்பதிவிற்கு பதில் அளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…