சிவராஜ்குமார் மற்றும் பிரகாஷ்ராஜை பாராட்டி பார்த்திபன் போட்ட பதிவு

அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்த ‘சித்தா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியானது. ‘சித்தா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவு தெரிவித்து பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளத்தில், “நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும் , சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அடுத்து நடிகர் சிவராஜ்குமார் “மற்றவர்களின் உணர்வுகளை நாம் எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது. கன்னட திரையுலகம் சார்பாக நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சித்தார்த். இதைச் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், அதைக் கண்டு நாங்கள் மிகுந்த மன வருத்தம் அடைகிறோம். இனி இப்படி நடக்காது” என்று கூறினார்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “‘ஜெயிலர்’படத்தில் கிளப்பிய Mass-ஐ விட,நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு !!!!

எதற்கு?மனதில் உள்ளதை தில் உள்ள மனிதர்களாக நேர்மையாக சொல்லி இருக்கிறார்கள். நீண்ட(கால)காவேரி பிரச்சனையை அதன் நீள அகலங்களில் அரசுகள் அலசி ஆராய்ந்து இன்னும் நீண்ட காலம் தீரா பிரச்சனையாக்கி அரசியல் செய்வதை விட்டு விட்டு,ஒரு கலைஞனை காயப் படுத்தி ஆவதென்ன?

அவர்கள் …. எதிரிகளாக நினைக்கும் நம்மிடமிருந்து எதிர்ப்பு எழுவதை விட,அவர்கள் தெய்வமென மதித்த மறைந்த திரு ராஜ்குமார் அவர்களின் வம்சாவழியும், அவர்கள் பெரிதும் நேசிக்கும் திரு சி.ரா.கு எதிர்ப்பையும் மன்னிப்பையும் வெளிபடுத்தும் போது, அநாவசியமாக அநாகரிகமாக நடந்துக் கொண்ட மிக சிலர் (அவர்கள் மட்டுமல்ல கர்நாடகா என்பது) திருந்த வாய்ப்புள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

jothika lakshu

Recent Posts

வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

14 minutes ago

கம்ருதீன் கேட்ட கேள்வி, ஆதிரை சொன்ன பதில், வெளியான பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ.!!

கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…

8 hours ago

இட்லி கடை படத்தின் ஒன்பது நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

8 hours ago

மீனாவுக்கு புது பைக் வாங்கிய முத்து, ஹோட்டலுக்கு திறப்பு விழா நடத்திய ஸ்ருதி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

10 hours ago

திட்டம் போட்டு குழம்பில் உப்பு போட்டா கனி,பிரவீன்.. ஆதிரை கேட்ட கேள்வி, வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

10 hours ago

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி செய்த விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

11 hours ago