actor parthiban-post-goes-viral
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவர் தற்போது இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘TEENZ’ திரைப்படத்திற்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இந்நிலையில், இசையமைப்பாளர் டி. இமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், \”பிறந்த ஏழு பாடல்களுக்கும் தந்தையான டி.இமான் அவர்களுக்கு நன்றி. பின்னணி இசையிலும் தூள் கிளப்ப வாழ்த்துகள்\” என்று குறிப்பிட்டுள்ளார்.
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
Modha Rathri Title Song Video | Rishikanth | Anishma AnilKumar | Raja Karuppasamy | Bharath…
Mudhala Mudiva Video Song | Modha Rathri | Rishikanth | Anishma AnilK | Bharat Sankar…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…