actor chiyaan vikram post funny memes viral
கோலிவுட் திரை உலகில் ரசிகர்களால் அன்போடு சியான் என்று அழைத்து வரும் முன்னணி நடிகர் தான் விக்ரம். இவரது நடிப்பில் அண்மையில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் 1 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் கோப்ரா திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மாபெரும் வெற்றி திரைப்படமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் குறித்து நடிகர் விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களிடம் உரையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் விக்ரம் தன்னையும் தன் மகன் துருவ் விக்ரமையும் இணைத்து கலாய்த்து இருக்கும் மீம்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்திருக்கிறார். அது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
அதில், ஆதித்ய வர்மாவுக்கும், ஆதித்த கரிகாலனுக்கும் உள்ள வித்தியாசம் எனக் குறிப்பிட்டு, “நீங்க காதல் தோல்வி ய மறக்க Bar க்கு போனவங்க… அதே நான் காதல் தோல்வி ய மறக்க War க்கு போனவன்… Both are not sameee!!! என குறிப்பிட்டுள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த ஸ்டோரிக்கு லைக்ஸ்களை தட்டி வருகின்றனர்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…