Actor Arya is under investigation by the Cyber Crime Police
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகாரில்
தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மனு உரிய விசாரணைக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டிலும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நடிகர் ஆர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட நடிகர் ஆர்யா, நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார்.
அங்கு சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…