actor-arjun-mother-passes away
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். பிரபல கன்னட நடிகர் ஷக்தி பிரசாத்தின் மகனான இவர் முதலில் கன்னட படங்களில் நடித்து வந்தார். பின்னர் தமிழில் நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அர்ஜுன் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். சமீபத்தில் சர்வைவர் என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் தொகுப்பாளராகவும் மாறினார். தற்போது சில படங்களில் அர்ஜுன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அர்ஜுனின் தாயார் லக்ஷ்மி தேவம்மா இன்று உயிரிழந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த 85 வயதாகும் லக்ஷ்மி தேவம்மா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு திரையுலகினர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…