actor ameerkhan latest update
பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென முத்திரையை பதித்திருக்கிறார். அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து நிலவிய நிலையில், வசூல் ரீதியாக கடும் இழப்பை சந்தித்தது. இதனால், அடுத்ததாக அமீர் கான் நடிக்கவிருந்த ‘சாம்பியன்ஸ்’ படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்று தகவல்கள் பரவி வந்தன.
அமீர்கான் இந்நிலையில், சாம்பியன்ஸ் படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு அமீர் கான் பேசியதாவது, “சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளேன். சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யவுள்ளேன். இதையும் படியுங்கள்: புதிய மையில் கல்லை எட்டிய ரஞ்சிதமே பாடல் அமீர்கான் நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். நடிப்பில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகாது என்று கருதுகிறேன்.
அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணமாக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். எனது உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கும் காலகட்டத்தில் நான் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…