Aadhi About Meet With Ajith Kumar
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆதி. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். மரகத நாணயம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நிக்கி கல்ராணியின் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது.
இதனையடுத்து அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் இவர் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித்தை சந்தித்து தன்னுடைய திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அப்போது நடந்த சந்திப்பு குறித்து ஆதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பத்திரிக்கை வாங்கிக்கொண்ட அஜித் சார் திருமணத்திற்க்கு பிறகு நடிப்பது குறித்து கேட்டார். அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என கூறினோம். அதற்கு அவர் திருமணத்திற்கு பெண்கள் மாற வேண்டும் என்ற அவசியம் இல்லை அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். ஆனால் வாழ்க்கையில் நல்லபடியாக இருக்கவேண்டும் என கூறினார் என தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு அஜித் சார் வருவாரா என்று கேள்வி எழுப்ப அது தெரியவில்லை என பதிலளித்துள்ளார்.
நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor