96 The Movie 2 latest update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடித்த இருந்த திரைப்படம் 96. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தை சி பிரேம்குமார் இயக்க மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. சொல்லாமல் மறைத்த பள்ளிப் பருவக் காதலை மையமாக வைத்து இந்தப் படம் உருவானது.
தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் ரீமேக் ஆகி அங்கும் நல்ல வெற்றியைப் பெற்றது. ராம் மற்றும் ஜானுவாகவே மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்தனர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா.
இதனால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டார் இயக்குனர் பிரேம் குமார்.
அது மட்டும் இல்லைங்க இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளையும் அவர் தொடங்கிவிட்டார். இந்த முறையும் படத்தில் ஹீரோ ஹீரோயினாக விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து படக்குழு அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
96 படத்தின் இரண்டாம் பாகத்தின் கதைக்களம் எப்படி இருக்கப் போகிறது என்ற ஆர்வம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டுள்ளது.
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…
https://youtu.be/8M_qU0YXY-I?t=7
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…