கோலாகலமாக நடைபெற போகும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் இறுதிப்போட்டி. முழு விவரம் இதோ

தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிங்கிங் ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்.

குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது.

சரிகமப சீசன் 3 ( சீனியர்ஸ் ) நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 மொத்தம் 28 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட்டை நடத்தி குழந்தைகளின் திறமையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் என நான்கு பேர் இதுவரை பைனலுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீ ஸ்டைல் ரவுண்டு மூலமாக நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவ்வாறாக மொத்தம் 6 போட்டியாளர்களுடன் அனல் பறக்கும் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி வரும் 17-ம் தேதி நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண ஆசைப்படுபவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச டிக்கெட்டுகளை பெற சென்னை கிண்டியில் உள்ள ஜீ தமிழ் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நடுவர்களின் மதிப்பெண்கள் மட்டுமின்றி மிஸ்டு கால் மூலமாக மக்களின் ஓட்டுகளை வைத்து வெற்றியாளரை தேர்வு செய்யும் வகையில் இந்த கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 6 போட்டியாளர்களில் டைட்டிலுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை தட்டி செல்ல போகும் போட்டியாளர் யார்? என்பது வரும் ஞாயிறு அன்று தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

6 final contestant of sarigamapa season3 in zee tamil update
jothika lakshu

Recent Posts

முத்து மீது கோபப்பட்ட மீனா.. ஸ்ருதி ரவிக்கு வந்த புதிய சிக்கல்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

26 minutes ago

சூர்யா கொடுத்த வார்னிங்.. மாதவி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago

அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் சிங்கம் புலி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

17 hours ago

சிம்பு குறித்து பேசிய நடிகர் கென் கருணாஸ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…

18 hours ago

வெற்றிமாறன் எழுதிய முதல் கதை அரசன்.. இயக்குனர் ராம் ஓபன் டாக்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…

18 hours ago

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

2 days ago