FahadhFaasil #NazriyaNazim
தமிழில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட படங்களில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. குறிப்பாக மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் மற்றும் ஓம் சாந்தி ஓசானா ஆகிய படங்கள் நஸ்ரியாவுக்குள் இருந்த குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியது.
கிட்டத்தட்ட அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதற்கு முன்பு நடித்த அனைத்து படங்களிலுமே ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது கணவர் பகத் பாசில் ஜோடியாக மலையாளத்தில் உருவாகி வரும் டிரான்ஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார் நஸ்ரியா. இந்த படத்தை பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியுள்ளார்.
இதற்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரங்கள் போல அல்லாமல் இந்த படத்தில் மிக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் நஸ்ரியா. இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப்படம் திரைக்கு வருகிறது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…