முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சூரரைப் போற்று படக்குழு

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் மாறா தீம் மற்றும் வெய்யோன் சில்லி ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. மண்ணுருண்ட என தொடங்கும் அந்த குத்துப்பாடலை பிரபல பாடகர் செந்தில் கணேஷ் பாடியுள்ளார். பாடலாசிரியர் ஏகாதசி இப்பாடலை எழுதியுள்ளார்.

Suresh

Recent Posts

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

23 hours ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

23 hours ago

இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…

23 hours ago

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…

1 day ago

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…

1 day ago

திரையரங்குகளில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…

1 day ago