மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தனர்.

இந்தியன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர். இதனிடையே கமல்ஹாசனுக்கு காலில் சிறிய அறுவை சிகிச்சை நடந்ததால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்த கமல்ஹாசன், தற்போது பூரண குணமடைந்து படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராகி உள்ளார்.

பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் தொடர்ச்சியாக 35 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்கிறார். இதற்காக அங்கு பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துள்ளனர். பிரியா பவானி சங்கரும் இதில் பங்கேற்று நடிக்கிறார். இந்தியன் படத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

நான் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த அறிமுகம் காட்சி இதுதான்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…

15 hours ago

ஜனநாயகன் பிரச்சனை.. ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.!!

ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

15 hours ago

விஜய் மீது தொடரும் விமர்சனம்.. நடிகர் ஜான் விஜய் கொடுத்த பதில்..!

நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…

16 hours ago

Vishwanath and Sons TEASER (Tamil)

https://youtu.be/glU1Xc7dTKk?si=0VuCt-EXiR3RNwGc

16 hours ago

திட்டம் போட்டு வாத்தியாரை அனுப்பிய சுந்தரவல்லி.. வருத்தப்பட்ட நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago

முத்து மீது கோபப்பட்ட மீனா.. ஸ்ருதி ரவிக்கு வந்த புதிய சிக்கல்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

22 hours ago