மாஸ்டர்-ல நான் தான் ஹீரோ….. விஜய் வில்லன் – விஜய் சேதுபதி பேச்சு

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது: மாஸ்டர் படத்தோட போஸ்டர் வெளியிடுவதற்கு முன் படக்குழுவினருக்கு, விஜய் சார் போன் பண்ணி என்னோட பெயரையும் சேர்க்க சொன்னாராம். அத கேட்ட உடனே எனக்கு ஷாக் ஆயிடுச்சு.

எல்லா நடிகர்களுக்கு அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கனும்னு நினைக்கிறவர் விஜய். நீங்க ஏன் அதிகமாக பேசுறதில்லனு விஜய் சார்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் நான் பேசுறதவிட அதிகமா கவனிப்பேன்னு சொன்னார். இந்த படத்துல ஒவ்வொரு காட்சிக்கும் அவர் மெனக்கிட்டிருகார். இந்த படத்துல நான் தான் ஹீரோ. அது எப்படினா, விஜய்க்கு நான் வில்லன்னா, எனக்கு விஜய் வில்லன். அப்போ நான் தான ஹீரோ.

இவ்வாறு அவர் பேசினார்.

Suresh

Recent Posts

Adada Thiruda Lyrical Video Song

Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…

26 minutes ago

Double Occupancy Official Trailer

Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy

29 minutes ago

விஜய்யை பார்க்கும் முன் மகளிடம் சத்தியம் வாங்கிய குஷ்பு!

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…

2 hours ago

முழுக்க முழுக்க இசையால் பேசும் சிங் கீதம் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…

2 hours ago

ஓணம் ரிலீஸில் மோதும் முன்னணி மலையாள நட்சத்திரங்கள்!

கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…

2 hours ago

‘பெத்தி’க்கு எழும் எதிர்ப்பு – பெண்களை பொருளாக பாவிக்கிறதா சினிமா?

ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…

2 hours ago