akshay kumar
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவை உலுக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளனர். இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர். பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகள் நிவாரண நிதி திரட்டி வருகின்றன. அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார். இதற்காக சமூக வலைத்தளத்தில் பலரும் அவரை பாராட்டினர். தற்போது மும்பை மாநகராட்சிக்கும் ரூ.3 கோடி வழங்கி இருக்கிறார். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள் போன்றவற்றை தயார் செய்வதற்காக இந்த தொகையை அவர் வழங்கி உள்ளார்.
மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க இரவு-பகலாக வேலை செய்துவரும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தொண்டு அமைப்பினர், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…