kgf yash
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் கே.ஜி.எப். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது. அதுமட்டுமின்றி 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படம் கன்னடம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது அதன் இரண்டாம் பாகம் அதைவிட பிரம்மாண்டமாக உருவாகிறது.
இந்நிலையில், நடிகர் யஷ் சினிமாவில் நுழைய எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: நடிக்கும் ஆசையில் பாக்கெட்டில் வெறும் 300 ரூபாயுடன் பெங்களூருக்கு வந்தேன். இவ்வளவு பெரிய நகரத்தில் எப்படி சாதிக்க போறோம் என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், தன்னம்பிக்கை இருந்தது.
முதலில் நாடக மேடைகளில் வேலை செய்தேன். டீ கொடுப்பது முதல் அனைத்து வேலைகளையும் செய்தேன். பின்னர் மேடை நாடகங்களில் நடித்தேன். அதில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பின்னர் சினிமாவில் நடித்தேன் என கூறினார்.
Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…
கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…