Soori
‘கொரோனா வைரஸ்’ ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர்.
இதுகுறித்து நகைச்சுவை நடிகர் சூரி கூறியதாவது: “மனைவி குழந்தைகளுடன் பேசக்கூட நேரம் இல்லாமல், ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த எனக்கு பயம் கலந்த ஓய்வு கிடைத்து இருக்கிறது. இந்த ஓய்வில், வீட்டு வேலைகளில் மனைவிக்கு எப்படியெல்லாம் உதவ முடியுமோ, அப்படியெல்லாம் உதவுகிறேன். குழந்தைகளை குளிப்பாட்டி விடுகிறேன். சாப்பிட வைக்கிறேன். ஊரில் இருக்கும் உறவினர்களிடம் போன் மூலம் பேசி, நலம் விசாரிக்கிறேன்.
பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள்… அன்னியர்களை வீட்டுக்குள் விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் நடத்தி வரும் ஓட்டல்களில், மொத்தம் 350 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் விடுமுறை கொடுத்து விட்டேன். அவர்களின் சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யாமல், முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன்.
இதேபோல் வறுமையில் வாடும் நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிகர் சங்கம் மூலம் ரூ.1 லட்சம் கொடுத்து இருக்கிறேன். மூன்றாம் உலகப்போர் வந்தது போல் ஒரு அச்சத்தை கொரோனா ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…