கொரோனா பீதியால் ஆடம்பர திருமணத்தை தவிர்த்த நடிகர்

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நிதின். இவர் தெலுங்கில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமானார். இந்த படம், அதே பெயரில் ஜெயம் ரவி நடிக்க தமிழில் ரீமேக் ஆகி வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் நிதின் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ராம்கோபால் வர்மா இயக்கிய ‘அக்யுத்’ இந்தி படத்திலும் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இவருக்கும், ஷாலினி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தை ஏப்ரல் 15 மற்றும் 16-ந் தேதிகளில் துபாயில் நடத்த திட்டமிட்டனர். துபாய்க்கு நடிகர்-நடிகைகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்று அதிகமானோரை அழைத்து சென்று ஆடம்பரமாக திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்தன.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, துபாய் திருமண ஏற்பாடுகளை நிதின் ரத்து செய்துவிட்டார். ஐதராபாத்தில் உள்ள வீட்டிலேயே திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளார்.

Suresh

Recent Posts

ஜன நாயகன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…

16 hours ago

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

19 hours ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

2 days ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

2 days ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

2 days ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

2 days ago