கொரோனா குறித்து டிக்டாக்கில் கேலி செய்த நடிகைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

தமிழில், சிம்பு நடித்த ‘காதல் அழிவதில்லை’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சார்மி. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது, பிரபல தெலுங்கு இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவர் தயாரித்த, ஐ ஸ்மார்ட் சங்கர் என்ற படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் அவர் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி கேலி செய்யும் விதமாக டிக்டாக் செய்து ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில், வாழ்த்துக்கள் நண்பர்களே… ஏன்னு தெரியுமா? டெல்லிக்கும் தெலங்கானாவுக்கும் கொரோனா வைரஸ் வந்துடுச்சாம். அதைதான் கேள்விப்பட்டேன். அதற்காக வாழ்த்துகள் நண்பர்களே’ என்று பெரிதாகச் சிரித்தபடி தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ வைரலானது. பல ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். ‘சீரியசான விஷயத்துக்கு இப்படியா சிறு பிள்ளைத்தனமாக வீடியோ போடுவீங்க?’ என்று திட்டி இருந்தனர். இதையடுத்து அந்த வீடியோவை நீக்கிய சார்மி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Suresh

Recent Posts

டிராகன் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன்,…

1 hour ago

VADAM Official Trailer

https://youtu.be/Ro4xvpksYeE?si=vNCAZZ3MHulbfkI3

4 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

5 hours ago

அரசன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

5 hours ago

அண்ணாமலை கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் விஜயா மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…

11 hours ago

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

1 day ago