‘கில்லர்’ படப்பிடிப்பில் விபத்து: நடிகர் எஸ்.ஜே.சூர்யா காயம்
தமிழ் சினிமாவில் வாலி, குஷி, நியூ, இசை ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த எஸ்.ஜே.சூர்யா தற்போது கில்லர் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
மேலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2, ஜெயிலர் 2 உள்பட பல படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இயக்கும் படம் கில்லர்.
இப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் கனவுப் படமான இதில், காருக்கு முக்கியத்துவம் இருப்பதால், ஜெர்மனியில் இருந்து புதிய பிஎம்டபிள்யூ கார் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்காகச் சண்டைக்காட்சி படப்பிடிப்பு சென்னை பாலவாக்கத்தில் நடந்து வந்தது. கயிறு கட்டியபடி அக்காட்சியில் பங்கேற்ற எஸ்.ஜே.சூர்யா, கீழே இறங்கும்போது எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்தார்.
அவர் காலில் கம்பிகள் குத்தியதால் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு காலில் 2 தையல்கள் போடப்பட்டன. மருத்துவர்கள் 15 நாட்கள் ஓய்வெடுக்கக் கூறியிருப்பதால் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…